/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - டில்லிக்கு வரும் 9 முதல் ஜி.டி., ரயில்
/
தாம்பரம் - டில்லிக்கு வரும் 9 முதல் ஜி.டி., ரயில்
ADDED : மே 04, 2024 12:22 AM
சென்னை,சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் ஜி.டி., விரைவு ரயில், வரும் 9ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ரயில் கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி., விரைவு ரயில், வரும் 9ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
அதன்படி, புதுடில்லியில் இருந்து இன்று புறப்படும் ஜி.டி., விரைவு ரயில், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
வரும் 9ல் தாம்பரத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, எழும்பூர், ஆந்திர மாநிலம், கூடூர் வழியாக புதுடில்லிக்கு செல்லும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.