sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டாபிராம் மேம்பால பணியில் ஒருவழி பாதையை முடிக்க கெடு 13 ஆண்டு இழுபறிக்கு முடிவு

/

பட்டாபிராம் மேம்பால பணியில் ஒருவழி பாதையை முடிக்க கெடு 13 ஆண்டு இழுபறிக்கு முடிவு

பட்டாபிராம் மேம்பால பணியில் ஒருவழி பாதையை முடிக்க கெடு 13 ஆண்டு இழுபறிக்கு முடிவு

பட்டாபிராம் மேம்பால பணியில் ஒருவழி பாதையை முடிக்க கெடு 13 ஆண்டு இழுபறிக்கு முடிவு


ADDED : மே 13, 2024 01:46 AM

Google News

ADDED : மே 13, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை - திருத்தணி நெடுஞ்சாலை, சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராமில், ரயில்வே கேட் உள்ளது.

இதன் வழியாக, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், 45 நிமிடங்களுக்கு ஒருமுறை, தானியங்கி ரயில்வே கேட் மூடப்படுவதால், நெடுஞ்சாலையின் இருபக்கமும், வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத சூழல் தொடர்ந்து நீடிப்பதால், பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய - மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதன்படி, 2010- -11ம் ஆண்டில் 33.48 கோடி ரூபாய் செலவில், நான்குவழிசாலை ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையை ஆறுவழியாக விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்தது.

இதனால், நான்குவழி மேம்பால சாலை திட்டத்தை, ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை மறு ஆய்வு செய்தது. இதையடுத்து, இப்பணிக்கான திட்ட மதிப்பீடு 52.11 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆறுவழிச்சாலை மேம்பாலமாக அமைக்க முடிவாகி, 2018ல் பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கட்டுமான பணிகள் காலதாமதமாகின. வருவாய் துறையினர் தலையிட்டு 5,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தனர்.

இதையடுத்து, மேம்பாலப் பணி காரணமாக, சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சென்னை, அம்பத்துார், ஆவடியில் இருந்து, திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

இதனால், இரு மார்க்கத்திலும் 7 கி.மீ., சுற்றிச் செல்வதாக, அவர்கள் தினந்தோறும் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த ஆண்டு செப்., 9ல், அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, மேம்பாலத்தில் ஒருவழிப் பாதையில் பணிகளை விரைந்து முடித்து, அக்., மாதம் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும், மழை மற்றும் 'மிக்ஜாம்' புயல் பாதிப்பால், பணிகள் மீண்டும் தொய்வடைந்தன.

தற்போது, சென்னை - -திருவள்ளூர் மார்க்கத்தில், மேம்பாலத்தின் இருபுறமும் ஏற்ற - இறக்கம் பகுதி சரிவுப் பாதையில் மண் கொட்டப்பட்டு,சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது வரை 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே பகுதியில் 3.26 மீட்டர் பகுதியில் மட்டும் பணி நடக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் இறுதிக்குள், மேம்பாலத்தின் ஒருவழிப் பாதை பணிகளை முழுதாக முடிக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்டம் நிர்வாகம் 'கெடு' விதித்துள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை, இப்பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது.

எனினும், பட்டாபிராம் காவல் நிலையம் அருகே 'ரவுண்டானா' பணிகள் மற்றும் ரயில்வே பணிகள் இன்னும் துவங்கவில்லை.எனவே, மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிய இன்னும் ஓராண்டாகும் என தெரிகிறது.

'டைடல் பார்க்' திறப்பு தாமதம்

மேம்பால பணிக்காக பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே, கட்டுமான பொருட்களை தேக்கி வைத்துள்ளனர். இதனால், ஐந்து ஆண்டுகளாக பட்டாபிராமில் இருந்து இயக்கப்படும் அரசு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேம்பால பணி தாமதமாவதால், 'டைடல் பார்க்' திறப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- டி.சடகோபன். சமூக ஆர்வலர், பட்டாபிராம்

பாலத்தின் நீளம் 780 மீட்டர்

கடக்கும் வாகனங்கள் 4 லட்சம் (தினம்)

நெரிசல் அரை கி.மீ., துாரம்

(ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு)

சுற்றிச் செல்லும் வாகனங்கள் 7 கி.மீ., (சென்னை - திருவள்ளூர்)

முடிந்துள்ள பணி 85 சதவீதம்

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us