/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி
ADDED : ஜூலை 04, 2024 12:25 AM

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நடந்து வரும் பணிகளால், அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நெமிலி, மண்ணுார், காட்டு கூட்டுச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
நெமிலி, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர், தன் மகள் நிஷா, 8, உடன் நேற்று முன்தினம், சாலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கச் சென்றார். ஓட்டிச் சென்ற சைக்கிள் ரிக் ஷாவை, நெமிலி சாலையோரம் நிறுத்தி, அதன் மீது நிஷாவை உட்கார வைத்தார்.
அதிலிருந்து தவறி சாலையில் விழுந்த நிஷா, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த 'டாரஸ்' லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.