/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை
/
பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை
ADDED : மே 16, 2024 12:44 AM
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே, சென்னை மார்க்கத்தில், குப்பை நிறைந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அங்கு நின்றிருந்த திருநங்கை லட்சுமி என்பவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அப்பகுதிக்கு சென்றார். பிறந்து சுமார் மூன்று மணி நேரமே ஆன குழந்தை என தெரிந்தது.
குழந்தையை மீட்ட திருநங்கை, அங்கிருந்தோர் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினார்.
இது குறித்து குழந்தையை மீட்ட திருநங்கையிடம் அச்சிறுபாக்கம் போலீசார், விசாரித்தனர். பின், வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், குழந்தையை சுங்கச்சாவடி பகுதியில் போட்டுச் சென்றவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.