/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி பலி
/
பொது கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி பலி
ADDED : ஏப் 25, 2024 12:52 AM

எண்ணுார்,எண்ணுார், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன்; கார் டிரைவர். இவரது மனைவி எழிலரசி டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவர்களது 18 வயது மகன் பரத், படிப்பில் ஆர்வம் இல்லாததால், தாயுடன் சேர்ந்து டிபன் கடையை கவனித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று, பாரதியார் நகர் கடற்கரைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பரத், ராட்சத அலையில் சிக்கினார்.
பின் அவரது கதறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீனவர்கள் பரத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பரத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். உடலை கைப்பற்றிய எண்ணுார் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

