/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உண்டியல் சேமிப்பு பணத்தில் தண்ணீர் பந்தல் திறந்த சிறுவன்
/
உண்டியல் சேமிப்பு பணத்தில் தண்ணீர் பந்தல் திறந்த சிறுவன்
உண்டியல் சேமிப்பு பணத்தில் தண்ணீர் பந்தல் திறந்த சிறுவன்
உண்டியல் சேமிப்பு பணத்தில் தண்ணீர் பந்தல் திறந்த சிறுவன்
ADDED : மே 11, 2024 12:02 AM

எண்ணுார், எண்ணுார் அனல்மின் நிலையம், மூன்றாவது குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு; மின் ஊழியர்.
இவரது மகன் அபிமன்யு, 8, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார்.
சிறுவன், தன் உண்டியல் சேமிப்பு பணமான, 1,000 ரூபாயில், எண்ணுார் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் வங்கி, தபால் நிலையம் மற்றும் கத்திவாக்கம் ரயில் நிலையம் செல்வோர் பயன்பெறும் வகையில், தண்ணீர் பந்தல் திறக்க விரும்பினார்.
அதன்படி, தன் ஆசையை பெற்றோரிடம் தெரிவித்து, வங்கியின் முன் நேற்று காலை, தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நான்காவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஜெயராமன், சிறுவனின் செயலை கண்டு, அவரை வெகுவாக பாராட்டி, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.