/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
/
சிறுமியை குதறிய நாய் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : செப் 12, 2024 12:17 AM
ஆவடி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, அக்கம் பக்கத்தினருக்கு பலகாரம் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கிடந்த, 'லாப்ரடர்' வகை வளர்ப்பு நாய், சிறுமியை கடித்துள்ளது. இதில், சிறுமியின் கையில் பற்கள் பதிந்து ரத்தம் கொட்டியது; அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர்.
இதன், 'சிசிடிவி' காட்சி பதிவுகள், நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திருமுல்லைவாயில் போலீசார், நாய் உரிமையாளர் முனிரத்தினம், 64, என்பவர் மீது, நாய் வளர்ப்பதில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பிரிவின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

