/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவு தாண்டியும் மது விற்ற பார் மீது வழக்கு
/
நள்ளிரவு தாண்டியும் மது விற்ற பார் மீது வழக்கு
ADDED : மே 14, 2024 12:33 AM
அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனியில் 'லிவ்விங் ரும்' என்ற பெயரில் தனியார் மதுக்கூடம் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் இயங்கி வருவதால், அப்பகுதியினர் கடும் அவதியடைந்தனர். இதுதொடர்பாக போலீசுக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.
வார இறுதி நாட்களான, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மது குடிப்பவர்கள் ரகளை செய்வதாகவும், அரசின் விதிகளை மீறி, அதிகாலை வரை அதிகப்படியான சத்தத்துடன் பாடல்களுக்கு நடனமாடுவது உள்ளிட்ட செயல்களால் அவதிப்படுவதாகவும், புகார்களில் தெரிவிக்கப்பட்டன. நள்ளிரவிலும் விதிமீறி மதுக்கூடம் இயங்குவது குறித்து, நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் துணை கமிஷனர் சீனிவாசனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நள்ளிரவில் மதுக்கூடத்திற்குள் நுழைந்த தனிப்படை போலீசார் அங்கிருந்தோரை வெளியேற்றினர். அவர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை பறிமுதல் செய்தனர். பின், மதுக்கூடம் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

