ADDED : ஜூலை 09, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார் - தாழங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலே கூரை பெயர்ந்து, கந்தல் கோலமாக காட்சியளித்தது. ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
தற்போது, நிலைமை படுமோசமாகி, நிழற்குடை முழுதும் உடைந்து, சுக்கு நுாறாக விழுந்து விட்டது. இதனால், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வெயில், மழை காலங்களில் கடும் அவதிப்பட்டு வருகிறோம்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புது நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவசங்கர், தாழங்குப்பம்.