/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் இடத்தில் கொட்டிய குப்பையால் தீ விபத்து
/
கோவில் இடத்தில் கொட்டிய குப்பையால் தீ விபத்து
ADDED : செப் 15, 2024 12:21 AM

நங்கநல்லுார், சென்னை, நங்கநல்லுாரில் பனச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலம் உள்ளது. குளத்தை ஒட்டியுள்ள இந்த இடம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, மதில்சுவர் எழுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குப்பை சேகரிக்கும் உர்பேசர் நிறுவன உழியர்கள், அதிகப்படியான சேகரமாகும் குப்பை மற்றும் மரக்கழிவுகளை, கோவில் இடத்தில் வீசி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று மாலை குப்பை குவிக்கப்பட்ட பகுதியில் திடீரென தீ பிடித்து, கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்து வார்டு கவுன்சிலர் தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து, சாலையில் சென்ற தண்ணீர் லாரியை மடக்கி தீயை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுத்தார். அரை மணிநேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒயர்கள் சேதமடைந்தன. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு ஒருமணிநேரத்திற்கு பின் சீரானது.
பழவந்தாங்கல் போலீசாரின் விசாரணையில் புகை பிடிப்பவர்கள் துாக்கி எறிந்த தீ குச்சியால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.