/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் தீ விபத்து 'பொக்லைன்' எரிந்து நாசம்
/
குப்பை கிடங்கில் தீ விபத்து 'பொக்லைன்' எரிந்து நாசம்
குப்பை கிடங்கில் தீ விபத்து 'பொக்லைன்' எரிந்து நாசம்
குப்பை கிடங்கில் தீ விபத்து 'பொக்லைன்' எரிந்து நாசம்
ADDED : ஜூலை 26, 2024 12:37 AM

பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரில், மாநகராட்சிக்குச் சொந்தமாக, 2 ஏக்கர் பரப்பில் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
பணியிலிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துரைப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான, குப்பை அள்ளும் சிறிய ரக,'பொக்லைன்' வாகனம், தீயில் எரிந்து கருகியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீப்பற்றியது தெரிந்துள்ளது.