ADDED : ஏப் 26, 2024 12:26 AM

வண்ணாரபேட்டை, சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சமியுல்லா, 40. இவர் வண்ணாரப்பேட்டை, டி.எச்.ரோட்டில் மரக்கிடங்கு வைத்துள்ளார்.
இங்கு, கட்டில், மேஜை உள்ளிட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். நேற்று மரக்கிடங்கில் திடீரென தீப்பற்றியது. கிடங்கில் இருந்த மரப்பொருட்களிலும் தீ பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின்படி, வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிடங்கில் இருந்த இரு பைக்குகள் மற்றும் மரப்பொருட்கள் என, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படவில்லை. வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

