/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த நபர் கைது
/
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த நபர் கைது
ADDED : ஜூன் 25, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுமார், 34. இவரது மனைவி சுகன்யா, 28. தம்பதிக்கு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 20ம் தேதி, சுகன்யா குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர், குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து, வீட்டின் உள்ளே புகுந்து, சுகன்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார்.
இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்தனர். இதில், சதுரங்கபட்டினத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.