/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
/
வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
ADDED : ஆக 05, 2024 01:05 AM

வடபழனி, வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் எதிரில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. கடந்த 2ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைக்க முயன்றார். இதைக்கண்ட பகுதிவாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வடபழனி போலீசார் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர். போலீசாரிடம் அந்த நபர் 'அறையில் ஒருவர் சிக்கி இருக்கிறார்; அவரை, கதவை உடைத்து காப்பாற்ற முயன்றேன்' எனக் கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் நடைபாதையில் தங்கி, வேலைகள் செய்து வந்த செந்தில் குமார், 45, என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் தெடர்ந்து விசாரிக்கின்றனர்.