/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி
/
பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி
ADDED : மே 11, 2024 12:10 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் அருகே, நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண், பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க போவதாகக் கூறி குதித்துள்ளார்.
இதைப் பார்த்த, அதே பகுதியைச் சேர்ந்த சாஹார், 30, என்பவர், அவரை காப்பாற்றி கரையில் படுக்க வைத்திருந்தார். இது குறித்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி, அங்கு வந்த மருத்துவர், அவரை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் டெல்லி கணேஷ் அளித்த புகார் அடிப்படையில், சாத்தாங்காடு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனு, 40, என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.