/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக உதயமாகும் கொளத்துார் தாலுகா
/
புதிதாக உதயமாகும் கொளத்துார் தாலுகா
ADDED : ஆக 05, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாவட்டத்தில், 16 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், அயனாவரம் தாலுகாவை இரண்டாக பிரித்து, கொளத்துார் பகுதியை மையப்படுத்தி, கொளத்துார், சிறுவள்ளூர், பெரவள்ளூர் பகுதியை உள்ளடக்கி, தனி தாலுகா அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கள ஆய்வு, தாலுகா அலுவலகம், நிதி ஒதுக்கீடு, ஊழியர்கள் நியமனம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதத்தில், கொளத்துார் தாலுகா உதயமாகும் வகையில், வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.