/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
/
'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ADDED : ஆக 13, 2024 01:04 AM

கே.கே.நகர், கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 43; வெல்டிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டு ஹாலில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியின் அருகே துாங்கினார்.
அப்போது, அவரது இடது கை தோள்பட்டை குளிர்சாதன பெட்டியில் உரசி உள்ளது. இதில், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்தது.
துடித்தவரை காப்பாற்ற அவரது மனைவி முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தும் தப்பினார். வெங்கடேசனை மீட்டு உறவினர் உதவியுடன் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில், வெங்கடேசன் உயிரிழந்தது தெரிய வந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.