/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைன் விளையாட்டில் ரூ.89,000 இழந்தவர் புகார்
/
ஆன்லைன் விளையாட்டில் ரூ.89,000 இழந்தவர் புகார்
ADDED : ஜூலை 03, 2024 12:16 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, இ.ஹெச்.சாலையை சேர்ந்தவர் சிவகாமி, 26; தனியார் நிறுவன ஊழியர். இவர் மொபைல்போன் எண்ணிற்கு கடந்த மே, 28 ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டாஸ்க் விளையாடினால் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி சிவகாமி, பணம் கட்டி ஆன்லைனில் டாஸ்க் விளையாடி வந்துள்ளார்.
அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், 89,000 ரூபாய் கட்டி சிவகாமி விளையாடினார். அதிலும் சிவகாமி வெற்றி பெற்ற நிலையில், மொத்தமாக தருவதாக தெரிவித்த மர்மநபர், பணத்தை தராமல் இணைப்பையும் துண்டித்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவகாமி, இதுகுறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.