/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி
/
போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி
ADDED : மே 31, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் தாமோதரன், 33. இவர், மனைவியை பிரிந்து நான்கு ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். கிடைத்த கூலி வேலை செய்து, தினமும் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம், அளவுக்கு அதிகமாக மது அருந்தி, சோழிங்கநல்லுார், காந்தி நகரில் மயங்கி கிடந்தார். நள்ளிரவு வரை ஒரே இடத்தில் இருந்ததால், பகுதிமக்கள் செம்மஞ்சேரி போலீசில் தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தபோது, நாக்கு வறண்டு பலியானது தெரிந்தது. போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.