ADDED : ஆக 22, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், 1வது வார்டுக்கு உட்பட்ட ராதா நகர், சவுமியா நகர் சாலை, கடந்த பத்து ஆண்டாக புனரமைக்கப்படாமல், மிக மோசமாக, நடக்கக்கூட லாயக்கற்று உள்ளது. குண்டும் குழியுமான சாலையில், பள்ளிக் குழந்தைகள், முதியோர், பெண்கள் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். தவிர, சாலையில் தேங்கும் மழை நீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தெரு முழுதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.முருகவேல், ராதாநகர்.