/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடர் விடுமுறை எதிரொலி '‛சரக்கு' பதுக்கல் அதிகரிப்பு
/
தொடர் விடுமுறை எதிரொலி '‛சரக்கு' பதுக்கல் அதிகரிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி '‛சரக்கு' பதுக்கல் அதிகரிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி '‛சரக்கு' பதுக்கல் அதிகரிப்பு
ADDED : ஏப் 15, 2024 12:49 AM
செங்குன்றம்:தமிழகத்தில், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 17 முதல் 19 வரை, மூன்று நாட்களுக்கு 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் பிரசாரம் முடியும், 17ம் தேதி மாலை 5:00 மணி வரையிலும், 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு பிறகும், வழக்கம் போல் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என, அத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனால், பல்வேறு பிரச்னைக்கு வழி வகுக்கும் என, தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.
இதனால், தேர்தல் கமிஷன், மேற்கண்ட மூன்று நாட்களும், டாஸ்மாக் கடைகளுக்கு முழு நேர விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
வேறு வழியின்றி, டாஸ்மாக் அதிகாரிகளும் ஒத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுக்கூடங்கள் நடத்துவோரும், தங்கள் கட்சியினருக்கு தேர்தல் பரிசு அளித்து உற்சாகமூட்ட அரசியல் கட்சியினரும், மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, செங்குன்றம், சோழவரம், மாதவரம், மீஞ்சூர் உள்ளிட்ட, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், அரசியல் கட்சியினரின் தனி அலுவலகம், நம்பிக்கையான நிர்வாகிகளின் வீடுகளில், உள்ளூர் சரக்கு மற்றும் ஆந்திர சரக்குகள் பதுக்கி வைக்கப்படுகின்றன.
போலீசாரும், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினரும், அதிரடி சோதனை நடத்தினால், பதுக்கல் சரக்குகள் சிக்கும். தேர்தலும் அமைதியாக நடக்கும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

