/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மாதமாக எரியாத தெரு மின் விளக்கு
/
ஒரு மாதமாக எரியாத தெரு மின் விளக்கு
ADDED : ஏப் 30, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், பாலைய்யா கார்டன், பிருந்தாவன் தெரு போக்குவரத்து நிறைந்தது. இச்சாலையில் பாரத் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட மின் விளக்கு, ஒரு மாத்திற்கு மேலாக எரியவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளில் நாய்கள் அதிகம் உள்ளன. அவை இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால் இருட்டில் தடுமாறி கீழே விழுந்து சிலர் விபத்துகளை சந்திக்கின்றனர். மாநகராட்சி மின் வாரிய பிரிவில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கை உடனடியாக எரிய வைக்க வேண்டும்.

