ADDED : ஆக 09, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்,அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, 23; 'ஏசி' மெக்கானிக். நேற்று மதியம், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ், வானகரம் அடுத்த ஓடமா நகர் அருகே, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார்.
பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், நிலை தடுமாறி விழுந்தார். இதில், லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே தினேஷ்பாபு உயிரிழந்தார்.