/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறை
/
பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறை
பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறை
பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிறை
ADDED : ஆக 02, 2024 12:16 AM
சென்னை,சென்னை அடுத்த, பொன்னேரி டி.வி.புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்; தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கும், தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்வதாக கூறிய ரமேஷ், அந்த பெண்ணிடம் நகை, பணம், மொபைல் போன் போன்றவற்றை அபகரித்துள்ளார். மேலும், ஆசை வார்த்தைக்கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
பின், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ரமேஷ், அவரது ஜாதியை குறிப்பிட்டு அநாகரிகமாக பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரின்படி எம்.கே.பி.நகர் போலீசார், ரமேஷ் மீது 2020ல் மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
சென்னை வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.அல்லி முன், இவ்வழக்கு நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது எனக்கூறி, ரமேஷுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.