/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்
/
ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்
ADDED : ஆக 22, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்,
கொருக்குப்பேட்டை, தங்கவேல் பிள்ளை தோட்டம் 3வது தெருவைச் சேர்ந்தவர் வேலு, 28. இவர், வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மூன்று திருமண மண்டபங்களை குத்தகை எடுத்து, மேல் வாடகை விடும் தொழில் செய்து வந்துள்ளார்.
தொழிலுக்காக உறவினர்கள், நண்பர்களிடம், 50 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. போதிய வருவாய் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று மாலை எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரையில் வேலுவின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு கொலையா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.