ADDED : ஜூன் 20, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 4:30 மணியளவில், மர்மநபர் ஒருவர், கோவில் அருகே உள்ள மரத்தில் ஏறி, கோவிலுக்குள் புகுந்துள்ளார்.
அங்கிருந்த உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். அப்போது, அதில் அமைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால், அக்கம் பக்கத்தினர் விழித்தனர். உடனே, வந்த வழியே திருடன் தலைதெறிக்க ஓடினான்
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.