/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லிப்ட்' கொடுத்த வாலிபரை வெட்டிய வழக்கில் திருப்பம்
/
'லிப்ட்' கொடுத்த வாலிபரை வெட்டிய வழக்கில் திருப்பம்
'லிப்ட்' கொடுத்த வாலிபரை வெட்டிய வழக்கில் திருப்பம்
'லிப்ட்' கொடுத்த வாலிபரை வெட்டிய வழக்கில் திருப்பம்
ADDED : ஜூலை 04, 2024 12:39 AM
ஓட்டேரி, மேடவாக்கம், குட்டியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி இரவு பணி முடித்து, அதிகாலை 3:00 மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இருவர் நந்தகுமார் வந்த பைக்கை மடக்கி 'லிப்ட்' கேட்டுள்ளனர்.
இருவரையும் பனந்தோப்பு, ரயில்வே காலனி மைதானம் அருகே இறக்கி விட்டபோது, 'லிப்ட்' கேட்டு வந்தவர்கள் நந்தகுமாரிடம் தகராறு செய்து, அவரை மறைத்து வைத்த கத்தியால் வெட்டி தப்பினர்.
காயமடைந்த நந்தகுமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெட்டுப்பட்ட நந்தகுமாருக்கு தலையில் ஆறு தையலும், வலது கையில் நான்கு தையல்களும் போடப்பட்டன. ஓட்டேரி போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை உதவி ஆய்வாளர் ஜோதிமணி உள்ளிட்ட போலீசார் குற்றவாளிகளான அயனாவரத்தைச் சேர்ந்த வசந்த், 26, யோவான், 25, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்தாண்டு யோவானை கொலை செய்ய, தன் நண்பர்களான கரண் உள்ளிட்டோருக்கு நந்தகுமார் 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்துள்ளார்.
அதில் காயமடைந்த யோவான் தன் நண்பருடன் சேர்ந்து 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்த நந்தகுமாரிடம் 'லிப்ட்' கேட்டு சென்று வெட்டியது தெரியவந்தது.