/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்ற பெண் ரவுடி ஐஸ் ஹவுசில் சிக்கினார்
/
கஞ்சா விற்ற பெண் ரவுடி ஐஸ் ஹவுசில் சிக்கினார்
ADDED : மே 09, 2024 12:12 AM

ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதியில், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக, ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று பைக்கில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆண் மற்றும் பெண் என, இருவர் வலம் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் சையத் பஷீர் பாஷா, 35, அவரது தோழி ரஹமத் நிஷா, 33, என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சையத் பஷீர் பாஷா மீது குற்ற வழக்குகள் உள்ளன.
ரஹமத் நிஷா ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் கைதானது தெரிய வந்தது. மேலும், அவர் மீது கொலை உள்ளிட்ட ஏழு வழக்குகள் உள்ளன.
ஐஸ் அவுஸ் பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால், நிஷா மடிப்பாக்கத்தில் குடியேறினார். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, ஐஸ் ஹவுஸ் பகுதியில் வினியோகம் செய்ய வலம் வந்து, விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.