/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
/
தேனுபுரீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி புறப்பாடு
ADDED : மே 16, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடம்பாக்கம், சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 11 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ பெருவிழா, மே., 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிகழ்ச்சியின், மூன்றாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அதிகார நந்தி புறப்பாடு நடந்தது.
நான்கு மாட வீதிகள் வழியாக சோமாஸ்கந்தர், அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.