ADDED : மே 17, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழநி, வடபழநி பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன், பெண் ஒருவரிடம் பணப்பையை பறித்துக் கொண்டு, மர்ம நபர் தப்பிச் சென்றார். வடபழனி போலீசார் விசாரித்ததில், அவர் கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த சதாம் உசேன்,32, என தெரிந்தது.
இவர் மீது, சென்னையில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, வடபழனி 100 அடி சாலையில், சதாம் உசேனை கைது செய்தனர்.

