ADDED : மே 15, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
அண்ணாசாலை: சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து, தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சஜாத் உசேன்கான், 69. இவரை, 2023ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கில், அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார்.
தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், பிப்., 11ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று சிக்கினார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
