ADDED : மே 08, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
ராயபுரம்: காசோலை மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராயபுரம், மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, 37. இவர், 2025ல் காசோலை மோசடி வழக்கில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரை கைது செய்து ஆஜர்படுத்த, கடந்த 6ம் தேதி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
