/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைச்சர்கள் மீது நடவடிக்கை அ.தி.மு.க., சார்பில் மனு
/
அமைச்சர்கள் மீது நடவடிக்கை அ.தி.மு.க., சார்பில் மனு
அமைச்சர்கள் மீது நடவடிக்கை அ.தி.மு.க., சார்பில் மனு
அமைச்சர்கள் மீது நடவடிக்கை அ.தி.மு.க., சார்பில் மனு
ADDED : மார் 27, 2024 12:27 AM
சென்னை, 'தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, மூன்று அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி இணை செயலர் பாபுமுருகவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களின் பிரசார வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்றும்படி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
வட சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பு மனு தாக்கலின்போது, அமைச்சர் சேகர்பாபு சட்டத்தை மீறி நடந்து கொண்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட சென்னை அ.தி.மு.க., வேட்பாளருக்கும், மாவட்ட செயலருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கொளத்துார், திரு.வி.க., நகர், ராயபுரம், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிகளுக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். விழுப்புரம் தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை வாகனத்தில் சென்றுள்ளார். அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க., --- எம்.பி., சண்முகம் சொல்லாத விஷயத்தை சொன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் பன்னீர்செல்வம், கூறியுள்ளார். அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

