/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை
/
வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை
வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை
வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை
ADDED : மே 23, 2024 12:44 AM

சென்னை, சென்னையில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள, அதிக அடைப்புகள் உடைய, 1,438 கி.மீ., நீளம் கொண்ட வடிகால்களை துார்வாரும் பணி நடக்கிறது. இப்பணியை, ஜூன் 30க்குள் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கீழ், 2,632 கி.மீ., நீளத்தில் வடிகால் உள்ளது. அடைப்பை பொறுத்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை துார்வாரி சீரமைக்கப்படும். இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை சென்னையில் பரவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அடைப்பு அதிகம் கண்டறியப்பட்ட, 1,438 கி.மீ., நீள வடிகால்களில், துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
அதேபோல் வடிகால்களை ஒட்டி, 73,500 எண்ணிக்கையில், கசடு அகற்றும் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாம்பலம், ராஜ்பவன், எம்.ஜி.ஆர்., நகர், கொடுங்கையூர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட 33 கால்வாய்கள், 54 கி.மீ., நீளத்தில் உள்ளன.
இதிலுள்ள ஆகாய தாமரை, திடக்கழிவுகள், கசடுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, நான்கு ரோபோடிக், இரண்டு ஆம்பிசியன் வாட்டர் மாஸ்டர் மற்றும் மூன்று மினி வாட்டர் மாஸ்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், அதிக அடைப்பு உள்ள வடிகால், கால்வாய்களில் துார் வாரப்படுகிறது.
இப்பணியை, ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், வேகப்படுத்தி உள்ளோம்.
விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில் நடக்கும் வடிகால் பணிகளையும், ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

