/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று நுாலகங்களை திறக்க நடவடிக்கை
/
மூன்று நுாலகங்களை திறக்க நடவடிக்கை
ADDED : செப் 04, 2024 01:07 AM
சென்னை:செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில், 400 மீட்டர் இடைவெளியில், மூன்று பகுதிநேர நுாலகங்கள் உள்ளன. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
தினமும், 2 மணி நேரம் திறக்க வேண்டும். முறையாக திறக்காததால், போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியாமல், வாசகர்கள் பரிதவித்தனர்.
இதனால், தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆங்காங்கே நுாலகங்கள் திறக்கப்பட்டன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று பகுதி நேர நுாலகங்களை திறக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு நுாலகம் திறக்கப்பட்டது. மற்றொரு நுாலகத்தை திறக்க ஒரு தன்னார்வ அமைப்பிடம் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. செம்மஞ்சேரி நுாலகம் விரைவில் திறக்கப்படும் என, செங்கல்பட்டு மாவட்ட நுாலகத்துறை அதிகாரி கூறினார்.