/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சிபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்
/
காஞ்சிபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்
ADDED : ஆக 01, 2024 01:03 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், நடிகை கவுதமிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் இருந்தது. தன் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய, சென்னையைச் சேர்ந்த அழகப்பன், 64, என்பவருக்கு, கவுதமி அதிகார பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
நடிகை கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த் என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது சொத்துக்களையும் அழகப்பன் மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தன் அண்ணன் ஸ்ரீகாந்த் சார்பில், நடிகை கவுதமி, கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், தலைமறைவாக இருந்த அழகப்பனை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் - 2ல், நடிகை கவுதமி மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர் கவுதமி நேற்று ஆஜரானார்.
அவரது மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வாசுதேவன், அழகப்பனுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில், அழகப்பனை ஐந்து நாள் காவலில் எடுக்க, போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.