தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது


ADDED : ஆக 29, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதம்பாக்கம், ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். தென்சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை, 2021ல் ஆதம்பாக்கத்தில், எதிர் கோஷ்டியான ராபின் மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசன் உள்ளிட்டோர், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நாகூர்மீரானின் கூட்டாளி ஜெயக்குமார் என்பவர் தலைமையில், ராபின் கூட்டாளி சீனிவாசனை, கடந்த ஆண்டு, 11 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது.

இதையடுத்து, இரு தரப்பினரும் அடிக்க மோதி கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இருதரப்பிலும் உள்ள முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகூர்மீரான் தரப்பு ஆட்களை கொலை செய்ய, ராபின் தரப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குறளரசன், 5, என்பவர் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறளரசனை நேற்று, போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us