/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.90 கோடியில் கூடுதல் கட்டடம்
/
தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.90 கோடியில் கூடுதல் கட்டடம்
தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.90 கோடியில் கூடுதல் கட்டடம்
தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.90 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : மார் 15, 2025 12:44 AM
தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்படுகின்றன.
அந்த வகையில், நான்காவது மண்டலம், இரும்புலியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி தேர்வு முடிந்து விடுமுறை விட்டவுடன், இப்பணி துவங்கப்படவுள்ளது.
இதேபோல், பெருங்களத்துாரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், அங்குள்ள பழைய கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், கதவு, ஜன்னல்களை மாற்றுதல் என, 60 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
மேற்கு தாம்பரம், கல்யாண் நகர் மேல்நிலைப் பள்ளியில், 1.20 கோடி ரூபாய் செலவில், நான்கு வகுப்பறைகளும், பழைய கட்டடம், 60 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளன.
பீர்க்கன்காரணை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன.