/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் பஸ் இயக்க உத்தரவு
/
கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் பஸ் இயக்க உத்தரவு
கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் பஸ் இயக்க உத்தரவு
கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் பஸ் இயக்க உத்தரவு
ADDED : ஜூன் 16, 2024 12:21 AM
சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொது பயணியரோடு மாணவர்களும் பயணிப்பதால், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே, தேவைக்கு ஏற்றாற் போல், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்து கழகம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2,700 மாநகர பேருந்துகளோடு, 150 ஸ்பேர் பேருந்துகளும் இயக்கும் வகையில், கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை மற்றும் மாலை 'பீக் ஹவர்களில்' கூடுதல் சர்வீஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் சிலர் கூறியதாவது:
மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே பணிமனைகள் தோறும் 20 சதவீதம் வரை காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
சில பணிமனைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தகுதி வாய்ந்த பேருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.
இருந்தும் அவர்கள், இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். பல பேருந்துகளில் 'பிரேக்' கூட இருக்காது. இதனால் ஒரு சிலர், 'உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என காரணம் கூறி வாடகைக்கு ஆட்டோ எடுத்து சவாரி செல்கின்றனர்.
எனவே, பயணியருக்கு தடையின்றி பேருந்துகளை இயக்க, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

