ADDED : ஏப் 17, 2024 12:49 AM
சென்னை, சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இங்கு தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளவும், பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், டி.ஆர்.ஓ., நிலையில் புதிய பணியிடம் உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, வருவாய் துறையில் இருந்து டி.ஆர்.ஓ., நிலையில், பார்த்திபன் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் சேர்த்து, மனைப்பிரிவு திட்டங்கள் தொடர்பான மூத்த எஸ்டேட் அலுவலர் பொறுப்பை, பார்த்திபன் கூடுதலாக கவனிப்பார் என சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சி.எம்.டி.ஏ., நிர்வாக அலுவலர் இந்துமதி பிறப்பித்துள்ளார்.
கிளாம்பாக்கத்துக்கு தனி கவனம் செலுத்த உருவாக்கப்பட்ட பதவியை, வேறு பணிகளுக்கு பயன்படுத்த சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது, பிற துறை அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
