/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் வாகனங்கள் நிறுத்த வசதி
/
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் வாகனங்கள் நிறுத்த வசதி
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் வாகனங்கள் நிறுத்த வசதி
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் வாகனங்கள் நிறுத்த வசதி
ADDED : ஆக 28, 2024 12:52 AM

சென்னை, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில், கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி நேற்று துவங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொதுமேலாளர் சதீஷ் பிரபு உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் பகுதி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகில் அமைந்துள்ளது. இந்த வாகன நிறுத்தும் பகுதியில் 450 இரு சக்கரவாகனங்களும், 25 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
இதற்கு முன், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1,100 இரு சக்கர வாகனங்களை மட்டுமே நிறுத்த முடிந்தது. இந்த கூடுதல் வாகன நிறுத்தும் வசதி வாயிலாக கூடுதலாக வாகனங்களை நிறுத்த முடியும்.