ADDED : ஆக 31, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சியில், 8,100ல் 3,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மீதமுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காததால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். பூங்காக்கள், குடிநீர் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன.
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், செப்., 3ல் செம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
- பழனிசாமி
அ.தி.மு.க.,
பொதுச்செயலர்