/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., ஓட்டுகளை கவர துடிதுடிக்கும் தி.மு.க., - பா.ஜ.,
/
அ.தி.மு.க., ஓட்டுகளை கவர துடிதுடிக்கும் தி.மு.க., - பா.ஜ.,
அ.தி.மு.க., ஓட்டுகளை கவர துடிதுடிக்கும் தி.மு.க., - பா.ஜ.,
அ.தி.மு.க., ஓட்டுகளை கவர துடிதுடிக்கும் தி.மு.க., - பா.ஜ.,
ADDED : ஏப் 15, 2024 12:32 AM
தென் சென்னை தொகுதியில் உள்ள சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அடர்த்தியான குடியிருப்புகள் உடைய பகுதியானதால், ஒரே இடத்தில், 50 முதல் 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதனால், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இந்த தேர்தலில், தி.மு.க.,வினரை அதிகளவு களத்தில் காண முடிகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான கந்தன் மீது அதிருப்தி, கோஷ்டி மோதல், பணம் செலவு செய்யும் முக்கிய நிர்வாகிகள் ஒதுங்கியது போன்ற காரணத்தால், அ.தி.மு.க.,வில் தேர்தல் பணி படுமந்தமாக நடக்கிறது.
அ.தி.மு.க., தொண்டர்கள் கூறியதாவது:
ஜெயலலிதா மறைக்கு பின், மயிலாப்பூர், சோழிங்கநல்லுாரில் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டு சரிந்து வருகிறது. காரணம் மாவட்ட செயலர் கந்தன் மீதுள்ள அதிருப்தி தான்.
இவரால், 30 ஆண்டுகளுக்கும் மேல் அ.தி.மு.க., முக்கிய பொறுப்புகளில் இருந்த, கவுன்சிலர் லியோ சுந்தரம், முனுசாமி, ராஜேந்திரன், ராஜாராம் உள்ளிட்டோர் பா.ஜ., - அ.ம.மு.க.,வில் சேர்ந்தனர். கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர். தற்போதும், கட்சிக்கு உள்ளும் கந்தன் மீதுள்ள அதிருப்தியலா பலர், தேர்தலில் தீவிர பிரசாரம் செய்யாமல், பெயரளவுக்கு உடன் இருக்கின்றனர்.
ஊராட்சிகளில், அ.தி.மு.க.,வுக்கு பண பலமாக இருந்த, 40 ஆண்டுகளாக பெரும்பாக்கம் ஊராட்சியை கைக்குள் வைத்திருந்த ராஜசேகர், காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரானார். இதனால், இவரின் ஆதவாளர்கள், காஞ்சிபுரத்திற்கு தாவினர்.
இதன் காரணமாக, கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம். பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், வேங்கைவாசல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள, 1.50 லட்சம் ஓட்டுகளை தி.மு.க.,வினர் கவர்ந்து வருகின்றனர்.
மொத்தத்தில், சோழிங்கநல்லுாரில் உள்ள அ.தி.மு.க., ஓட்டுகளை, தி.மு.க., - பா.ஜ., தங்கள் பக்கம் திருப்ப தீவிர முயற்சி செய்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -

