/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு அணி நிர்வாகிகள் புறக்கணிப்பு
/
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு அணி நிர்வாகிகள் புறக்கணிப்பு
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு அணி நிர்வாகிகள் புறக்கணிப்பு
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு அணி நிர்வாகிகள் புறக்கணிப்பு
ADDED : மே 09, 2024 12:21 AM
செங்குன்றம், செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு, காந்தி நகர், காரனோடை பகுதிகளில், நேற்று காலை, சோழவரம் ஒன்றியம் சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் மூர்த்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலர் கார்மேகம் உட்பட,ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை கட்சியின் மற்ற அணி நிர்வாகிகள் புறக்கணித்தும், வரவேற்பு கிடைக்காததும் அப்பட்டமாக தெரிந்தது.
இது குறித்து, அக்கட்சியினர் கூறியதாவது:
எதிர்க்கட்சியான நிலையில் எங்களுக்கு, கட்சி வாயிலாக எந்த வருவாயும் இல்லை. ஆனால், மாவட்ட செயலரை சந்தித்தால் செலவு தான் ஆகிறது. மேலும், கட்சி சார்பில், கடந்த ஓராண்டாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி, விழா ஏதும் நடத்தப்படவில்லை.
கடந்தாண்டு மழை வெள்ள பாதிப்பின் போதும், மக்களுக்கு உதவும் எந்த பணியும், மாவட்ட செயலர் செய்யவில்லை. இதனால், கடந்த மாதம் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், மக்களை தைரியமாக சந்திக்க முடியாத நிலைதான் இருந்தது.
மேலும் தேர்தல் பணியிலும், எங்கள் பணத்தை போட்டு செலவு செய்ய நேர்ந்தது. அதனால், கடன் தான் மிஞ்சியது.
ஆனால், மாவட்ட செயலரோ, 2026யை மனதில் வைத்து, கட்சி வேலைகளை செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறார்.
போதிய வருவாய் இன்றி, அதற்கு மீறிய செலவை செய்து, மக்களை சந்திக்க முடியாத நிலையில், எப்படி 2026ல் வெற்றி பெற முடியும் என்பதை, மாவட்ட செயலரும், கட்சி தலைமையும் உணர்ந்ததால், நிலை மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.