/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழையால் பாதிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுரை
/
பருவமழையால் பாதிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுரை
பருவமழையால் பாதிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுரை
பருவமழையால் பாதிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுரை
ADDED : ஆக 20, 2024 12:57 AM

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் காமராஜ் தலைமையில், பெருங்களத்துாரில் நேற்று நடந்தது. அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வளர்ச்சி நிதியின் கீழ், 1.90 கோடி ரூபாய் செலவில், 12 இடங்களில் குடிநீர் குழாய் மாற்றியமைக்கவும், நான்கு இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி மாற்றியமைக்கவும் முடிவானது.
அதேபோல், 94 லட்சம் ரூபாயில் 19 இடங்களில் பூங்காக்களை சீரமைக்கவும், வெள்ளம் தேங்குவதை தடுக்க மழைநீர் கால்வாயை துார்வாருதல் மற்றும் சாலையை சீரமைக்கவும் 10 கோடி ரூபாய் ஒதுக்க முடிவானது. இவை உட்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, ஒவ்வொரு மழையின் போதும், 4வது மண்டல பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்தபருவ மழையின்போது, வழக்கமாக பாதிக்கப்படும் பகுதிகளில் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு, மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு மண்டல தலைவர் அறிவுறுத்தினார்.
குரோம்பேட்டை: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில், குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.
இரண்டாவது மண்டலத்தில், 40 இடங்களில் பழுதடைந்துள்ள குடிநீர், பாதாள சாக்கடை குழாய், மழைநீர் கால்வாய், சிறுபாலம் ஆகியவற்றை மாற்றியமைத்து, சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க, , 3.11 கோடி ரூபாய் ஒதுக்க முடிவானது.
அதேபோல், பருவமழைக்கு முன், சிறிய கால்வாய் மற்றும் சிறுபாலங்களை, 1 கோடி ரூபாய் செலவில் துார்வாரி, மழைநீர் தடையின்றி சென்று, நீர்நிலைகளில் கலக்க வேண்டும்.
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 2.50 கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலைத் துறை பணியின்போது உடைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களை சீரமைப்பது, புதிய குழாய் பொருத்துவது, மேன்ஹோல் கட்டுவது என, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.