/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆப்ரிக்க மூதாட்டி தலையில் கட்டி அகற்றம்
/
ஆப்ரிக்க மூதாட்டி தலையில் கட்டி அகற்றம்
ADDED : ஜூலை 04, 2024 12:15 AM

வடபழனி, வடபழனி ஆற்காடு சாலையில், காவேரி மருத்துவமனையில் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த 69 வயது மூதாட்டிக்கு, தலையில் இருந்த 4 செ.மீ., அளவுள்ள கட்டியை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரங்கநாதன் ஜோதி கூறியதாவது:
பாரம்பரியமான மண்டைத் திறப்பு அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளி பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆப்ரிக்கா நாட்டு மூதாட்டிக்கு சாவி துளை முறையில், அவரது புருவம் அருகே சிறிய கீறலை செய்து, அதன் வாயிலாக கட்டியை அகற்றினோம். அறுவை சிகிச்சை, ஒரு மணி நேரத்தில் முடிந்தது. இரண்டு நாட்களில், நோயாளியும் முழு உடல் திறனைப் பெற்றார்.
இதற்கான செலவு, பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட, 30 சதவீதம் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.