/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 ஆண்டுக்கு பின் நிழற்குடை வெயில், மழைக்கு 'குட் பை'
/
10 ஆண்டுக்கு பின் நிழற்குடை வெயில், மழைக்கு 'குட் பை'
10 ஆண்டுக்கு பின் நிழற்குடை வெயில், மழைக்கு 'குட் பை'
10 ஆண்டுக்கு பின் நிழற்குடை வெயில், மழைக்கு 'குட் பை'
ADDED : மே 29, 2024 12:09 AM
செம்மஞ்சேரி,ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக குமரன் நகர் உள்ளது. இங்கிருந்து செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் செல்லும், 80 அடி அகல நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை உள்ளது.
ஓ.எம்.ஆரில் இருந்து இணைப்பு சாலை வழியாக, 15 - 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம் செல்கிறது. திருப்போரூர், கேளம்பாக்கம், இ.சி.ஆர்., உள்ளிட்ட பகுதியில் இருந்து, வீடு திரும்பும் பயணியர் இப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பர்.
இங்கு நிழற்குடை இல்லாததால், 10 ஆண்டுகளாக சாலையோரம் வெயில், மழையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு சார்பில், 16.70 லட்சம் ரூபாய் செலவில், நிரந்தர கட்டமைப்புடன் நிழற்குடை அமைக்கப்படுகிறது.
தற்போது, 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம், நிழற்குடையை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், மழை, வெயிலில் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.