/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் மஞ்சளான முகத்துவாரம் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பீதி
/
மீண்டும் மஞ்சளான முகத்துவாரம் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பீதி
மீண்டும் மஞ்சளான முகத்துவாரம் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பீதி
மீண்டும் மஞ்சளான முகத்துவாரம் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பீதி
ADDED : செப் 12, 2024 12:30 AM

எண்ணுார், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம், புழல் உபரி நீர், பகிங்ஹாம் கால்வாய் தண்ணீர் எண்ணுார் கழிமுகம் பகுதியில், முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும், சுடுநீர் மற்றும் சாம்பல் கழிவுகளால் முகத்துவாரம் முற்றிலும் பாழாகி போயுள்ளது. சமீபமாக முகத்துவார பகுதி, திடீரென அடர் மஞ்சள் நிறத்தில் மாறி விடுகிறது.
இதன் காரணமாக, மீன்வளம் பாதிக்கப்பட்டு, 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் இதே நிலைமை தொடர்ந்தது. முகத்துவாரத்தின் பெரும் பகுதியில், மஞ்சள் நிறத்தில் எண்ணெய் படலம் மிதந்தது.
இதனிடையே, ரசாயனம் ஏற்றி செல்லும் லாரிகளை கழுவி, பகிங்ஹாம் கால்வாயில் ஊற்றி செல்வதாகவும் அதன் காரணமாகவே, மஞ்சள் கழிவு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து, காரணத்தை கண்டறிந்து விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.