/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளாண் கல்லுாரி விளையாட்டு போட்டி அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
/
வேளாண் கல்லுாரி விளையாட்டு போட்டி அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
வேளாண் கல்லுாரி விளையாட்டு போட்டி அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
வேளாண் கல்லுாரி விளையாட்டு போட்டி அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 12:26 AM

சென்னை, வேளாண் கல்லுாரிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள், அச்சிறுபாக்கத்தில் துவங்கின.
எஸ்.ஆர்.எம்., வேளாண் மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், வேளாண் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு துவங்கின.
தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடக்க உள்ள இப்போட்டியில், மாநில அளவில் உள்ள எஸ்.ஆர்.எம்., - டான்பாஸ்கோ, குமரகுரு, ஆதிபராசக்தி, அண்ணாமலை பல்கலை, தி இந்தியன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வேளாண் கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.
இதில் வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கிரிக்கெட் உட்பட, மொத்தம் 13 விளையாட்டுகள் நடக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும், தலா 11 அணிகள் பங்கேற்று உள்ளன.
முதல் நாள் போட்டியை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி பதிவாளர் பொன்னுசாமி, விளையாட்டுத்துறை இயக்குனர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
போட்டிகள் தொடர்ந்து, நாளை மாலை வரை நடக்கின்றன.