/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏர் - இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து
/
'ஏர் - இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து
'ஏர் - இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து
'ஏர் - இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து
ADDED : மே 09, 2024 12:14 AM
சென்னை, கேரளா மாநிலம், திருவனந்தபுரம் - சென்னை இடையே, இரண்டு விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.
கேரளா மாநிலத்தில், 'ஏர் - இந்தியா' எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, சென்னைக்கு நள்ளிரவு 11:50 மணிக்கு வர வேண்டிய, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானமும், நேற்று நள்ளிரவு முன்தினம் 12:30 மணிக்கு, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும், திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.
அதே நேரத்தில், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்னை - சிங்கப்பூர் செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மற்றும் காலை 7:25 மணிக்கு சென்னை - கோல்கட்டா செல்லும், ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.